புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (16:48 IST)

சிம்பு படத்தில் தனுஷை தாக்கி வசனமா? மீண்டும் கிளம்பும் சர்ச்சை!

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தில் தனுஷை தாக்கி சில வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சுசீந்தர்ன் 26 நாட்களில் படமாக்கி முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.

அதையடுத்து இன்று படத்தின் ஆடியோவும் டிரைலரும் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை முன்பே பார்த்த சிலர் அதில் தனுஷை மறைமுகமாக சீண்டும் விதமாக சில வசனங்கள் இருப்பதாக கூறி வருகின்றனர். தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தைக் குறிப்பிடும் விதமாக ‘நான் எல்லோரையும் கொல்லும் அசுரன் இல்லை… எல்லாரையும் காப்பாத்தும் ஈஸ்வரன்’ என்பது போன்ற பன்ச் வசனங்கள் இடம்பெற்றுள்ள்தாம். இதனால் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இடையே மேலும் மோதல் எழ வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.