’வெந்து தணிந்தது காடு’: சிம்புவின் கேரக்டர் இதுதான்!
சிம்பு நடிப்பில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கிவிட்டனர். அதன்படி இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ டிசம்பர் 10ஆம் தேதி மதியம் 1.26 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த படத்தில் சிம்பு, முத்து என்ற கேரக்டரில் நடிக்கிறார் என்றும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.