வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (13:37 IST)

மீண்டும் தள்ளிப் போன ’மாநாடு’ படப்பிடிப்பு: இந்த முறை வித்தியாசமான காரணம்

சிம்புவின் ’மாநாடு’ திரைப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பதும் அதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 26ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறப்பட்டது
 
ஆனால் ஜனவரி 26 முடிந்து 27 வந்து விட்ட நிலையில் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் இது குறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது சிம்புவின் பிறந்தநாள் பிப்ரவரி 3ம் தேதி வருவதை அடுத்து அவரது பிறந்தநாளை மாநாடு படக்குழுவினர் சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடிவிட்டு அதன்பின்னர் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் தற்போது கிடைத்துள்ள புதிய செய்தியின்படி ’மாநாடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான லொக்கேஷன்களும் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே பிப்ரவரி 10ஆம் தேதி முதல் இலங்கையில் ’மாநாடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் ஆவது உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.