புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (20:37 IST)

’மாநாடு’ படத்தில் சிம்புவின் கேரக்டர்: வெங்கட்பிரபு அறிவிப்பு

சிம்பு நடிக்கவிருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் இன்று மாலை 6 மணி முதல் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாகவும், மேலும் முக்கிய வேடத்தில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்
 
ரிச்சர்ட் நாதனின் இயக்கத்தில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் உருவாகைருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு முதல்முறையாக ஒரு முஸ்லிம் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய கேரக்டர் என்ன என்பது குறித்து ரசிகர்கள் கருத்து கூறலாம் என்றும் தேர்வு செய்யப்படும் கேரக்டரின் பெயரை அறிவித்த ரசிகர் இந்த படத்தின் படப்பிடிப்பை பார்க்க அனுமதிக்கப்படுவர் என்றும் வெங்கட்பிரபு அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் சிம்புவுக்கு கேரக்டரை தேர்வு செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது