சிஐடி சகுந்தலாவாகும் ஸ்ருதி
சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுடன் ஹன்சிகா நடித்தது போல், சிங்கம் 3 -இல் அனுஷ்காவுடன் ஸ்ருதி நடிக்க உள்ளார்.
ஹரி இயக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதிக்கு சிஐடி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வேதாளம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஸ்ருதியின் மீதான அதிர்ஷ்டத்தில் திரையுலகுக்கு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.
மழை காரணமாக டிசம்பர் 2 தொடங்க வேண்டிய படப்பிடிப்பு இம்மாத இறுதிக்கு தள்ளிப் போயுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பை விசாகப்பட்டணத்தில் தொடங்க ஹரி முடிவு செய்துள்ளார்.