திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (15:29 IST)

கமலோட பெண்ணூங்கர அந்தஸ்து எனக்கு தேவையில்லை: சுருதிஹாசன் அதிரடி!!

நடிகர் கமல் ஹாசனின் மகள் சுருதிஹாசன் தமிழில் இசையமைபாளராக அறிமுகமாகி பின்னர் நடிகையானார்.


 
 
சமீபத்தில் சங்கமித்ரா படத்தில் இருந்து விலக்கப்பட்ட ஸ்ருதி ஹாசன் ஐதராபாத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் பேசியதாவது, ஹிந்தி படம் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைய வேண்டும் என நினைத்தேன். இப்போது பல மொழிகளில் நடித்து வருகிறேன்.
 
என் திறமையை யாரும் இன்னும் முழுமையாக பயன்படுத்தவில்லை. அப்பா கொடுத்த சுதந்திரத்தை நான் என்றும் தவறாக பயன்படுத்தியதில்லை.
 
கமல்ஹாசனின் மகள் என்ற அந்தஸ்த்து சினிமாவில் அறிமுகமான போது எனக்கு தேவைப்பட்டது. ஆனால் அந்த அந்தஸ்து கடைசி வரை எனக்கு உதவாது. 
 
இனி எனக்கு கமல்ஹாசன் மகள் என்ற அந்தஸ்து தேவையில்லை. சவாலான கதாபாத்திரங்களில் நடித்து நானே என் திறமையை நிரூபிப்பேன் என கூறியுள்ளார்.