திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 18 பிப்ரவரி 2017 (13:48 IST)

ஸ்ருதிஹாசன் காதலிக்கும் லண்டன் நாடக நடிகர்...?

ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து காதல் சர்ச்சை அவரை பின்தொடர்கிறது. சித்தார்த் உள்பட சில  நடிகர்களுடன் ஸ்ருதி கிசுகிசுக்கப்பட்டார். இப்போது லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்செல்லின் பெயர் அடிபடுகிறது.

 
சமீபத்தில் லண்டனிலிருந்து மும்பை வந்த கார்செல்லை ஸ்ருதி விமான நிலையம் சென்று வரவேற்றார். மூன்று தினங்கள்  மும்பையில் கார்செல் ஸ்ருதியுடனே தங்கியிருந்திருக்கிறார். மூன்று நாள் கழித்து அவர் லண்டன் திரும்பிய போது ஸ்ருதி விமான நிலையம் சென்று வழியனுப்பினார்.
 
இதை வைத்து மைக்கேல் கார்செல்லும் ஸ்ருதியும் காதலிப்பதாக வதந்திகள் பரவுகின்றன. ஆனால், ஸ்ருதி நடத்திவரும்  இசைக்குழு விரைவில் லண்டனில் நடத்தவிருக்கும் இசை நிழச்சி குறித்து விவாதிக்கவே கார்செல் இந்தியா வந்தார்,  அவர்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் என்று இன்னொரு தரப்பு சொல்கிறது.
 
யாரையேனும் காதலித்தால் ஆம் என்று சொல்ல தயங்குகிறவரா கமல் மகள்?