திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2017 (17:31 IST)

சுறாவுடன் நீச்சல் போட்ட ஸ்ரேயா

கடலில் இறங்கி சுறாவுடன் நீந்த வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நடிகை ஸ்ரேயா நிறைவேற்றியுள்ளார்.


 

 
தமிழில் பிஸியாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா தற்போது தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் சுற்றி வருகிறார். சிம்புடன் ஏஏஏ என்ற படத்தில் நடித்துள்ளார். அதுவும் தற்போது அந்த படம் சிக்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தனது ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கியுள்ளார். கடலில் இறங்கி சுறாவுடன் நீந்த வேண்டும் என வெகு நாட்களாக ஆசைப்பட்டு வந்தாரம். இவர் கடலுக்கு அடியில் நீந்தும் பயிற்சி பெற்றவர்.
 
அண்மையில் மாலத்தீவு சென்ற ஸ்ரேயா அங்கு கடல் பகுதியில் தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
தனியாக கடலுக்கு நடுவே படகு செலுத்திச் சென்றேன். பிறகு கடலில் குதித்து ராட்சத திமிங்கலம் மற்றும் சுறா மீன்களுடன் நீண்ட நேரம் நீந்தியபடி விளையாடினேன். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அங்கிருந்து திரும்பி வரும் எண்ணமே எனக்கு வரவில்லை, என்றார்.