வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (17:22 IST)

திருமணத்தில் லிப் டு லிப் முத்தம் கொடுத்த ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே

நடிகை ஸ்ரேயா தனது ரகசிய திருமணத்தில் கணவருக்கு லிப் டு லிப் முத்தம்  கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் “எனக்கு 20 உனக்கு 18” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து மழை, சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ்மகள்,  திருவிளையாடல், ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இது தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். 
 
இவரும் ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கொஸ்சீவ்வும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். சில வருட காதலுக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர். அதன்படி, இவர்களது திருமணம் மார்ச் மாதம் 17, 18, 19ஆகிய  தேதிகளில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது.
 
ஆனால், கடந்த 12-ம் தேதியே மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். மேலும், இந்த திருமணத்தில் ஸ்ரேயாவின் அம்மாவிற்கு விருப்பம் இல்லாததால் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ஸ்ரேயா தனது திருமணத்தின் போது தன் கணவர் ஆண்ட்ரே கோஸ்சீவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது.