1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (22:16 IST)

சூர்யா இல்லாமல் நடக்கும் ஷூட்டிங்? என்ன நடந்தது?

சூர்யா அடுத்து நடிக்கவுள்ள படம் புறநானூறு. இப்படத்தின் டைட்டில் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இப்படத்தின் அட்டேட் வெளியாகியுள்ளது.
 
இப்படத்தின் ஷுட்டிங் மதுரையில்  சூர்யா இல்லாமல் நடந்து வருகிறது. அதாவது சூர்யா இல்லாத போர்சன்களை  மற்ற நடிகர்களை வைத்து  படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா.
 
ஏன் இப்படத்தில் சூர்யா கலந்துகொள்ளவில்லை என்றால்,  வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்த  சூர்யாவின் ரசிகர்கள் 70 பேரை வரவழைத்து அவர்களுக்கு பரிசளித்து, பாராட்டியுள்ளார். மேலும், மனிதர்கள் மட்டுமன்று விலங்குகளுக்கு உதவிய ஒரு ரசிகருக்கு உயர்ந்த பரிசை சூர்யா வழங்கியதாக கூறப்படுகிறது. அதனால்தான் சூர்யா தற்போது சுதா கொங்கரா பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கின்போது, ஹரியானாவின்  பார்த்த லோகேசன்கள் சுதா கொங்கராவுக்கு பிடித்துப் போனதால், இப்படத்திற்கான ஷூட்டிங் அங்கும் நடக்கலாம் என தகவல் வெளியாகிறது. விரைவில் மதுரையில் நடக்கும் ஷூட்டிங்கில் சூர்யா கலந்துகொள்வார் என தெரிகிறது.