1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 21 ஜூன் 2018 (14:13 IST)

இறுதிக்கட்டத்தில் சூர்யா - செல்வராகவன் படம்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
 
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே.’. சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். பாலா சிங், இளவரசு, ஜெகபதி பாபு, ராம்குமார் கணேசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
 
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, நேற்று முன்தினம் தொடங்கியது. மிக நீண்ட நாட்கள் இந்தப் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. காரணம், தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்பதால், மீதமுள்ள காட்சிகளை ஒரே ஷெட்யூலில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.