கமல்ஹாசனின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி?
உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படமான விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
உலகநாயகன் கமலஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் கமல்ஹாசன் ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய் சேதுபதி ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் காரைக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பில் ஷிவானி நாராயணன் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் கமல்ஹாசன் படத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது