1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (15:01 IST)

கட்டையில தடுக்கி விழுந்திடப்போற... ஷாலுமா வெளியிட்ட செம போட்டோ!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துவிட்டார்.  ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார்.
 
ஆனால், தற்போது கொஞ்சம் வித்யாசமாக அடக்கம் ஒடுக்கமாக சுடிதார் அணிந்து கட்டை பாலத்தில் நடந்துக்கொண்டே போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கி நனைந்து வருகிறார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் ஒரு சிலர் டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்து கலாய்த்துத்தள்ளியுள்ளனர்.