செவ்வாய், 6 டிசம்பர் 2022
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified வியாழன், 22 செப்டம்பர் 2022 (20:05 IST)

மகனின் கைது நடவடிக்கை குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்த ஷாருக்கான் மனைவி!

aryan khan
போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட நிலையில் முதல் முறையாக ஷாருக்கானின் மனைவி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 
 
அவர் இதுகுறித்து கூறிய போது, ‘ஒரு பெற்றோராக நாங்கள் ஆரியன் கைது செய்யப்பட்டபோது அனுபவித்த சோகங்கள் வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது. அதிலும்  ஒரு அம்மாவாக நான் அனுபவித்தது யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள் 
 
இன்று நாங்கள் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் நேசித்தபடி வாழ்ந்து வருகிறோம். இந்த துயர் மிகுந்த காலம் எல்லோர் மீதும் அன்பு செலுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது
 
எங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பலர் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர் இந்த வகையில் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.