புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (17:45 IST)

ஷாருக்கான்- அட்லீ-ன் 'ஜவான்' படத்திற்கு கிடைத்த பெருமை!

shah rukh khan - vijay setthupathy
ஷாருக்கானின் ஜவான் படம் கெய்டி கேலக்சி ( gaeity galaxy) என்ற தியேட்டரில், காலை  6 மணிக்கு  சிறப்பு காட்சி திரையிடப்படும் முதல்  இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர்  நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ஜவான். இப்படத்தின்  ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன

இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து, விஜய் சேதுபதி, நயன்தாரா தீபிகா படுகோன்  மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகிறது.

ஏற்கனவே இப்படத்தின் 3 சிங்கில்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி  நேற்று ,  சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அட்லீ, அனிருத், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், யோகிபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், ஷாருக்கானின் ஜவான் படம் கெய்டி கேலக்சி என்ற தியேட்டரில், காலை  6 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படும் முதல்  இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.