புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (16:33 IST)

கருத்து வேறுபாடுகளை மறந்து சந்தித்துக்கொண்ட விஜய் சேதுபதி சீமான்! ஒன்று சேர்த்த கடைசி விவசாயி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் கடைசி விவசாயி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி முரளிதரனின் வாழ்க்கை வரலாறான 800 படத்தில் நடிக்க ஒப்பந்தமானதில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்கக் கூடாது எனக் குரல்கள் எழுந்தன. அதில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக விஜய் சேதுபதியை விமர்சித்தனர். இதனால் விஜய் சேதுபதிக்கும் சீமானுக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டது. பின்னர் அவர் நடிப்பில் வந்த துக்ளக் தர்பார் படத்தின் வில்லன் வேடம் சீமானை பிரதிபலித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் மறுபடியும் நாம் தமிழர் கட்சியினர் விஜய் சேதுபதி மேல் கோபமாகினார்.

இந்நிலையில் இப்போது இருதரப்பினரும் தங்கள் கோபங்களை மறந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படத்தை பார்த்து பாராட்டியுள்ளார் சீமான்.