வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:27 IST)

எஸ்.பி.பியின் உடல் அவரின் வீட்டிற்கு வந்தடைந்தது - மனதை உலுக்கும் புகைப்படம் இதோ

எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் அவரது வீட்டிற்கு வந்தடைந்தது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எஸ்பிபி உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சரியாக இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானார்.

அவரது மறைவு திரையுலகினரையும் லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் எம்.ஜி.எம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வீட்டிற்கு வந்தடைந்துள்ளது. அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.