இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜ் கேட்ட சம்பளம்… பதிலே சொல்லாமல் சென்ற ஷங்கர்!
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் சத்யராஜை இயக்குனர் ஷங்கர் அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதையைக் கேட்ட சத்யராஜ் படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் சத்யராஜுக்கு எந்தவொரு பதிலையுமே சொல்லாமல் ஷங்கர் சென்றுவிட்டாராம். இதனால் இந்தியன் 2 படத்தில் ஷங்கர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
1980 களில் பல படங்களில் வில்லனாக கலக்கிய சத்யராஜ் கமலுடன் நடித்த காக்கி சட்டை திரைப்படம் சத்யராஜுக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.ஆனால் அதன் பின்னர் கதாநாயகனாக பல ஆண்டுகள் கலக்கிய சத்யராஜ் இப்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.