வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (18:24 IST)

ஆக்சனுக்கு ஹீரோவாக மாறிய நடிகர் சதீஷ்.. ‘சட்டம் என் கையில்’ டீசர்..!

காமெடி நடிகர்கள் தற்போது ஹீரோவாக மாறி வருகின்றனர் என்பதும் சந்தானம், வடிவேலு, சூரி உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் ஹீரோவாகவும் ஜெயித்து வரும் நிலையில் நடிகர் சதீஷும் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’சட்டம் என் கையில்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டீசரில் உள்ள ஒரு நிமிட காட்சிகள் அனைத்தும் அதிரடி ஆக்சன் காட்சிகளாக இருப்பதை அடுத்து சதீஷ் ஆக்சன் ஹீரோவாக மாறிவிட்டார் என தெரிகிறது. சதீஷ், அஜய் ராய், பவல் நவகீதன், மைம் கோபி, கிருத்திகா, கேபிஒய் சதீஷ், வித்யா பிரதீப், பவா செல்லதுரை, ராமதாஸ், உள்ளிட்ட  பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சாச்சி  இயக்கத்தில் ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகிய இந்த படம் சதீஷை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva