1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (21:41 IST)

பிரபல இயக்குநர் படத்தில் சரத்குமாரின் முதல் மனைவி!

chaya sarathkumar
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா  வணங்கான் படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார். பாலா இயக்கி வருகிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில்,   நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியும், வரலட்சுமியின் அம்மாவுமான  சாயா, இப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்துள்ளார். இதனால் மேலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா, ராதிகா உள்ளிட்ட நடிகைகள் அம்மா கேரக்டரில் பிஸியாக இருந்த மாதிரி, வணங்கான் படம் வெளியான பிறகு   நடிகை சாயாவுக்கு அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்புகள் குவியும் என தகவல் வெளியாகிறது.
 
இயக்குனர் பாலாவின் படத்தில் நடிப்பவர்களுக்கு அடுத்தடுத்த படங்களில் அவர்களின் திறனுக்கு ஏற்க வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், இப்படத்தின் மூலம் சாயா தன் திறமை நிரூபித்து தமிழ் சினிமாவில்  குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.