வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (17:31 IST)

சந்தானம்-ரத்னகுமார் படத்தின் மோஷன் போஸ்டர்!

சந்தானம்-ரத்னகுமார் படத்தின் மோஷன் போஸ்டர்!
சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ரத்னகுமார் இயக்க இருக்கிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘குலுகுலு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
சந்தானம் ஜோடியாக அதுல்யா நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் . இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் சுற்றும் வாலிபனாக சந்தானம் நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் இவ்வருட இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது