1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 ஜூன் 2024 (07:58 IST)

பிரபல ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் ‘இங்க நாங்கதான் கிங்கு’ திரைப்படம்!

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி சந்தானம் நடிப்பில் அடுத்து உருவான இங்க நான்தான் கிங்கு என்ற படத்தை தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரித்தார். இந்த படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்கினார். டி இமான் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த மே 17 ஆம் தேதி ரிலீஸானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் சோபிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. ஓடிடியிலாவது இந்த படத்துக்கு வரவேற்புக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.