திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (11:44 IST)

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’ டீம்

பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
 
 
உலக அளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா, வருடம்தோறும் பிரான்ஸில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம், மே  17ஆம் தேதி தொடங்கும் விழா 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இந்த விழாவில், ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன், இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர் முரளி, கலை இயக்குநர் சாபு சிரில்  என ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் ரெட் கார்ப்பெட்டில் நடக்க இருக்கின்றனர். ‘சங்கமித்ரா’வின் ஃபர்ஸ்ட் லுக் அங்கு  வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
 
‘பாகுபலி’யைப் போல் உருவாக இருக்கும் வரலாற்றுக் காவியமான ‘சங்கமித்ரா’வை, 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது  ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.