எம்.ஜி.ஆர் ஸ்டைலில் மச்சினிச்சியுடன் கத்தி சண்டை போடும் சாண்டி - வீடியோ!
மச்சினிச்சியுடன் கத்தி சண்டை போடும் பிக்பாஸ் சாண்டி
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தருபவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்துவரும் நேரத்தில் சாண்டி தனது மச்சினிச்சியுடன் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கயிறு கட்டி மேலிருந்து தொங்கியபடி கத்தி சண்டை போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.