திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (15:33 IST)

நண்பனின் காதலியை, தனக்கு ஜோடியாக்கிக் கொண்ட வைபவ்

நடிகர் ஜெய்யின் காதலியாக நடித்த சனா அல்தாப், தற்போது வைபவின் காதலியாக நடிக்க இருக்கிறார்.


 

 
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடித்த படம் ‘சென்னை 28’ பார்ட் 2. இந்தப் படத்தில், ஜெய்யின் காதலியாக நடித்திருப்பார் சனா அல்தாப். வைபவ், வில்லனாக இந்தப் படத்தில் நடித்திருப்பார்.
 
‘வடகறி’ படத்தைத் தொடர்ந்து சரவண ராஜன் இயக்கும் படம் ‘ஆர்.கே. நகர்’. வைபவ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சனா அல்தாப். ‘பிளாக் டிக்கெட்’ நிறுவனம் மூலம் வெங்கட் பிரபு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். ‘சரோஜா’, ‘கோவா’ படங்களைத் தொடர்ந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் வெங்கட் பிரபு டீமில் இணைந்துள்ளார் சம்பத் குமார்.