திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (10:08 IST)

இரண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா எனக் கேட்ட ரசிகருக்கு சமந்தாவின் பதில் இதுதான்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அது தவிர புதிய படங்களில் அவர் கமிட்டாகவில்லை என சொல்லப்படுகிறது.

இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டு இருக்கும் மையோசிட்டிஸ் பிரச்சனைதான் என சொல்லப்படுகிறது. இப்போது அவர் அதற்கான சிகிச்சையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சமந்தா தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு நாக சைதன்யாவுடன் விவாகரத்து நடந்ததை அடுத்து இருவருமே இன்னும் இரண்டாவது திருமணம் பற்றி பேசவில்லை. இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ‘நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா” எனக் கேட்டுள்ளார். அதற்கு சமந்தா “அது தவறான முடிவு.  2023 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப் படி, முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து விகிதம் 50 சதவீதம் என்றால், இரண்டாவது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவீதம் 63 சதவீதமாக உள்ளது. மேலும் மூன்றாவது திருமணம் செய்தவர்கள் இடையே விவாகரத்து சதவீதம் 73 சதவீதமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.