1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2024 (10:18 IST)

பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷை பரிந்துரைத்த சமந்தா!

கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் இந்த படத்தை அட்லி ’பேபி ஜான் ‘ என்ற பெயரில் தயாரித்துள்ளார். அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கிய இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க, இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் சல்மான் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஜாக்கி ஷ்ராஃப் வில்லனாக நடிக்க தமன் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி பெரிய அளவில் மக்களின் ஆதரவைப் பெறாமல் தோல்விப் படமாக அமைந்துள்ளது. ஆனாலும் கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் அறிமுகமாக இந்த படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் “இந்த படத்தில் என்னைப் பரிந்துரைத்ததே நடிகை சமந்தாதான். இதை என்னிடம் வருண் தவான் தெரிவித்தார்” எனக் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடித்த பாத்திரத்தில் தமிழில் நடித்தவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.