வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (08:22 IST)

25 ஆவது நாள் வெற்றிவிழா கொண்டாடுவோம்… சாமானியன் படத் தயாரிப்பாளர் தகவல்!

மேதை படத்துக்குப் பிறகு தற்போது சாமான்யன் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார் ராமராஜன். அந்த படம் மே 23 ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் படம், ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுக்கவில்லை. இதுவரை படம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்ச ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இந்த பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் படம் ஓடாததற்கு படத்தின் தயாரிப்பாளர்தான் காரணம் என்று ராமராஜன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவரது நேர்காணலில் “நாங்கள் படத்தை எடுத்துக் கொடுத்துவிட்டோம். அதற்கு விளம்பரம் செய்தால்தானே மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர் படத்துக்கு விளம்பரமே செய்யாமல் படத்தைக் கொன்றுவிட்டார். எனக்கும் சம்பள பாக்கியும் கொடுக்கவில்லை.” என ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் படத்தின் வெற்றி விழா 25 ஆவது நாளில் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசியுள்ள அவர் “10 திரையரங்குகளில் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ராமராஜனுக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்பதால் கட்டண சலுகை அளித்துள்ளோம். படம் பார்த்தவர்கள் பிடித்துள்ளது. 25 ஆவது நாளன்று படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்” எனக் கூறியுள்ளார்.