1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2025 (09:35 IST)

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

Sakshi

பிரபல தமிழ் நடிகையும், மாடலுமான சாக்‌ஷி அகர்வால் திருமணம் கோவாவில் பெரிய ஆர்ப்பாட்டங்களின்றி சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.

 

 

பிரபலமான மாடலாக இருப்பவர் சாக்‌ஷி அகர்வால். தமிழ் சினிமாவிலும் ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்துள்ள இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக புகைப்படங்கள் பதிவேற்றி வரும் இவருக்கு ஏராளமான ஃபாலோவர்கள் உள்ளனர்.

 

இந்நிலையில் சாக்‌ஷி தனது சிறு வயது தோழனான நவ்னீத் மிஸ்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்போது கோவாவில் இவர்கள் இருவரின் திருமணம் திடீரென சர்ப்ரைஸாக நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்து புகைப்படங்களை சாக்‌ஷி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

அதை கண்டு திடீர் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்த ரசிகர்கள் சாக்‌ஷிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K