புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (17:47 IST)

விஜய்யோடு பேச்சுவார்த்தை இல்லையா? இயக்குனர் எஸ் ஏ சி விளக்கம்!

நடிகர் விஜய்க்கும் தனக்கும் பேச்சுவார்த்தையே இல்லை என சிலர் சொல்வதெல்லாம் அவர்கள் கற்பனை என கூறியுள்ளார்.

நேற்று நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா கட்சியைப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தன் ரசிகர்கள் யாரும் அதில் சேரவேண்டாம் என்று விஜய் தரப்பிடம் இருந்து அறிக்கை வெளியானது எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போல பெரிதாகியது.

இந்நிலையில் இன்று அது சம்மந்தமாக விளக்கமளித்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ‘எனக்குத் தேவைப்பட்டதால் நான் கட்சி தொடங்கியிருக்கிறேன். 1993 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் ஒரு அமைப்பாக தொடங்கப்பட்டது. விஜய் ரசிகர்களின் நலனுக்காகவும் அவர்களை உற்சாகத்துக்காவும்  இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. எனக்கும் விஜய்க்கும் பேச்சுவார்த்தை இல்லை என சிலர் சொல்வது அவர்களின் கற்பனை. கொரோனா பொதுமுடக்க சமயத்தில் கூட இரண்டு மூன்று முறை சந்தித்துப் பேசினோம்’ எனக் கூறியுள்ளார்.