திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 28 டிசம்பர் 2024 (15:03 IST)

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

2012-ம் வருடம் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் எஸ் ஆர் பிரபாகரன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன் மற்றும் சசிகுமார் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய  இயக்கினார். அந்த இரு படங்களும் தோல்வி படங்களாக அமைந்தன.

இதையடுத்து அவர் ஆரம்பித்துள்ள பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்‌ஷன்ஸ் முதல் படத்தை  தன்யா ராஜேந்திரனை வைத்து இயக்கினார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ்ட் வெங்கட், உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

இதற்கிடையில் விஜய் சேதுபதியை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கதை கேட்ட விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பிரபாகரன் இயக்கிய முதல் படமான சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.