செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (14:18 IST)

நயன்தாராவின் மவுசுக்கு இது தான் காரணமோ??

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாராவுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்துக் கொண்டே போகிறது. 


 
 
சீனியர் முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவரும் நயன்தாராவுடன் படத்தில் பணியாற்ற விரும்புகிறார்கள். அனைவரும் நயன்தாராவுடன் பணியாற்ற விரும்புவதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.
 
நயன்தாரா தனது காட்சியை முடித்த கையோடு கேரவனுக்கு சென்று ஓய்வு எடுக்க மாட்டார். செட்டில் இருந்து பிறரின் காட்சிகள் படமாக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பார். 
 
மேலும், படப்பிடிப்பு தாமதமானால் நயன்தாரா கோபப்பட மாட்டார். மாறாக பொறுமையாக காத்திருப்பார். மேலும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதை பழக்கமாக வைத்துள்ளார். இதனால் தான் நயன்தாராவின் மவுசு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.