'வேட்டைக்கும் ரெடி, கோட்டைக்கும் ரெடி'- விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
சமீபத்தில் நடிகர் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது போன்று நேற்று மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய நடிகர் விஜய் சம்பந்தமாக பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்பட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்
இதையடுத்து, நடிகர் விஜய்யை அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து நாளிதழில் வெளியான செய்தியைப் போல் போஸ்டர் வடிவமைத்து ஒட்டிய விவகாரத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்ககள் இயக்கத்தினர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'வேட்டைக்கும் ரெடி, கோட்டைக்கும் ரெடி' என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே மதுரையில் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் போஸ்டரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.