செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (15:12 IST)

புஷ்பா-2 படத்தில் ராஷ்மிகாவின் தோற்றம் லீக்!

Rashmika Mandanna
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் . இவர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில், பிரகாஷ்ராஜ்,சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
 
இப்படம் வசூல் குவித்து, பெரும் வெற்றி பெற்றது. எனவே இப்படத்தின் 2 வது பாகம் புஷ்பா -தி -ரூல் படமாக்கப்பட்டு வருகிறது.
 
சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி வைரலானது.
 
இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில், ராஷ்மிகாவின் தோற்றம் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
 
இதனால் படக்குழு அப்செட் ஆகியுள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அடுத்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.