மாமியாரை மாற்றிய சிம்பு...
தெலுங்கில் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் அத்தாரின்டிக்கி தாரேதி. இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் சிம்பு, மேகா ஆகாஷ் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதுவரை ஜார்ஜியாவில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி கமிட்டாகியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், யுவன்ஷங்கர் ராஜாதான் இந்தப் படத்துக்கு இசை என தற்போது உறுதி செய்திருக்கிறார்கள்.
அதேபோல், தெலுங்கில் இந்த படத்தில் அத்தை கேரக்டரில் நதியா நடித்திருந்தார். தமிழ் ரீமேக்கில் குஷ்பு நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார்.