செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (11:28 IST)

ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்குனர் யார் தெரியுமா?

jegan
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு புகைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது அடுத்த படம் ஒரு பிரபல அரசியல்வாதியின் வாழ்க்கை வரலாறு படம் என்றும், இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் இருப்பதாகவும் அறிவித்துள்ளார்
 
வியூகம், சபதம் ஆகியவை இந்த படத்தின் டைட்டில்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த படங்கள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு என்பதை அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் ஒரு அரசியல் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran