1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (14:45 IST)

ரஜினி நலமாக இருக்கிறார் - லைக்கா கிரியேடிவ் ஹெட் தகவல்

ரஜினி நலமாக இருக்கிறார் - லைக்கா கிரியேடிவ் ஹெட் தகவல்

ரஜினியின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அதனை பலமுறை ரஜினியுடன் சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தனர்.



சமீபத்தில் ரஜினியின் அண்ணன் தஞ்சாவூரில் ரஜினியின் உடல்நலத்துக்காக செய்யப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை பேசும்பொருளானது.
 
இந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட்டான ராஜு மகாலிங்கம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இன்று காலை ரஜினி சார் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரது குரலே சிங்கம் கர்ஜிப்பது போல் இருந்தது. ரஜினி சாரின் உடல்நிலை குறித்த சந்தேகங்களுக்கு இதுவே சிறந்த பதிலாகும் என கூறியுள்ளார்.
 
ஆக, ரஜினி நல்மாயிருக்கிறார்.