செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (08:21 IST)

40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் சிகிச்சைப் பற்றி சொன்னார்… இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

கடந்த 30 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் இருந்து செல்லு தமனியில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கத்தீட்டர் சிகிச்சை மூலமாக ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவனையில் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அந்த சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஐசியுவில் சிகிச்சை அறைக்கு அவர் மாற்றப்பட்டு விட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் நேற்று இரவு 11 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இதனால் அவர் அடுத்து நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அது குறித்து இப்போது இயக்குனர் லோகேஷ் விளக்கமளித்துள்ளார். அதில் “மருத்துவமனையில் ஒரு சிறிய சிகிச்சை செய்ய வேண்டியிருக்கு என ரஜினி சார் 40 நாட்களுக்கு முன்னெ என்னிடம் சொன்னார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.