செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (11:42 IST)

இயக்குனர் சிவா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிவா வீட்டுக்கு சர்ப்ரைஸாக சென்று பார்த்துள்ளார்.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூலில் மோசமில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிவாவின் அண்ணா நகர் இல்லத்துக்கு சென்று அவர் குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் சிவா குடும்பத்தினரோடு பேசிவிட்டு சென்ற ரஜினி சிவாவுக்கு தங்க சங்கிலி பரிசளித்துள்ளாராம்