செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:52 IST)

119 ஆபாச வீடியோக்கள்; 9 கோடிக்கு விற்க திட்டம்! – ராஜ் குந்த்ரா வழக்கில் பரபரப்பு!

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா 119 ஆபாச வீடியோக்களை விற்பதற்காக வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா பெண்களை வைத்து அபாச படம் எடுத்து அதை பல்வேறு தளங்களுக்கு விற்றதாக சில மாதங்கள் முன்னதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கில் இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜ் குந்த்ராவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், செல்போன், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டதில் 119 ஆபாச வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இவற்றை ராஜ் குந்த்ரா சுமார் 9 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.