1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha

ரசிகர்களுக்கு ரெட் அலார்ட் கொடுத்த ரைசா வில்சன்... தீயாக பரவும் ஹாட் போட்டோஸ்!

பிக் பாஸ் குயின் "ஓவியா" என்றால் பிக் பாஸ் பிரின்சஸ் "ரைசா"...! அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் இவர்கள் இருவரும் பெரும் பிரபலமடைந்து தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டனர். அந்த  நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இவருக்கும்  ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். 
 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா  விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன  ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது  ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது, ரெட் கலர் உடையில் அட்டை படத்திற்கு அட்டகாசமான போஸ் கொடுத்துள்ளார். அவரே வெளியிட்ட  இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.