வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (10:53 IST)

ரகுவரன், விஜய், சூர்யா கேரக்டரில் இவங்க தான் நடிக்கணும்! சாந்தி கிருஷ்ணா பேட்டி

ஒருவேளை 'நேருக்கு நேர்’ படம் ரீமேக் செய்யப்பட்டால், விஜய், சூர்யாவுக்கு பதிலாக தனுஷ், கார்த்தி நடிக்கலாம் என்றும் ரகுவரன் செய்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்தால்  அற்புதமாக இருக்கும் என்றும்  ‘பன்னீர் புஷ்பங்கள்’ சாந்தி கிருஷ்ணா தெரிவித்தார்.


 
‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் அறிமுகமானவர் சாந்தி கிருஷ்ணா. இவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி. மணல் கயிறு, நேருக்கு நேர் முதலான பல படங்களில் நடித்துள்ளார்.
 
இவர் அண்மையில், தனியார் இணையதளத்துக்கு  பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறுகையில்:
 
’நேருக்கு நேர்’ படத்தில் எனக்குத் தம்பியாக சூர்யா நடிச்சு இருந்தாரு. அதுதான் சூர்யாவுக்கு முதல் படம். ரொம்ப அமைதியாக இருப்பார். ரெண்டு வார்த்தைதான் பேசுவாரு. அதுவும் அளந்து தான் பேசுவாரு. 
 
சூர்யாவைப் போலத்தான் விஜய்யும். மிகவும் அமைதியாகவே இருப்பார். அளந்துதான் பேசுவார். லேசாகத்தான் சிரிப்பார்கள். ஆனால், இதெல்லாம் கேமிராவுக்கு வெளியேதான். கேமிராவுக்கு எதிரே வந்து நின்றுவிட்டால், அப்படியொரு நடிப்பை சூர்யாவும் கார்த்தியும் வழங்குவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
 
அன்றைக்கு நான் பார்த்த சூர்யா இல்லை. நடிப்பில், டயலாக் டெலிவரியில், எக்ஸ்பிரஷனில் எங்கேயோ போய்விட்டார் சூர்யா. மிகப்பிரமாதமான நடிகர் எனப் பெயர் வாங்கியிருப்பதைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.
 
நேருக்கு நேர் படம் இப்போது ரீமேக் செய்யப்பட்டால், ரகுவரன் கேரக்டருக்கு விஜய் சேதுபதி மிகப்பொருத்தமாக இருப்பார். இன்றைய தேதிக்கு, அந்தக் கேரக்டரை விஜய் சேதுபதிதான் பண்ணமுடியும். மேலும் எந்தக் கதாபாத்திரமென்றாலும் அதில் விஜய் சேதுபதி ஒரு டச் வச்சுக்கிட்டு வற்றாரு. அவர பாக்குறப்ப ஆச்சரியமா இருக்கு.
 
விஜய், சூர்யாவுக்கு பதிலாக யாரென்று யோசித்தால், விஜய் கேரக்டருக்கு தனுஷ் நடிக்கலாம். அதேபோல, அண்ணன் சூர்யா கேரக்டரை கார்த்தி செய்தால், சிறப்பாக இருக்கும்.
 
இவ்வாறு சாந்திகிருஷ்ணா கூறியுள்ளார்.