வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (22:24 IST)

விஜய் டிவி பிரபலத்திற்கு ரூ.10 லட்சம் பணம் வழங்கிய ராகவா லாரன்ஸ்

ருத்ரன் பட இசை வெளியீட்டு விழாவின்போது, நடிகர் லாரன்ஸ், நடிகர் பாலாவிற்கு ரூ. 10 லட்சம் பணம் வழங்கியுள்ளார்..

நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில், கதிரேசன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ருத்ரன். இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா, பாக்யராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை டிரெட் சென்டரில் நடைபெற்றது.

இதில், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்ச்சியின்போது, விஜய் டிவி புகழ் பாலாவிற்கு, ராகவா லாரன்ஸ் அவர தாயர் கையில் ரூ. 10 ல்ட்சம் நன்கொடை வழங்கினார்.