புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (14:25 IST)

சரக்கு அடிக்காமலே எங்களுக்கு கிக்கு ஏறுது... விஸ்கி விளம்பரத்தில் ராய் லட்சுமி!

சரக்கு அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு போதையேத்தும் ராய் லட்சுமி!
 
தமிழ், தெலுங்கு , மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு வெளியான தாம் தூம் திரைப்படம் அவரின் சினிமா கேரியரில் மிகமுக்கியமான படமாக பார்க்கப்பட்டது. 
 
தொடர்ந் து தமிழில் காஞ்சனா திரைப்படம் அவரது கெரியருக்கு மிகச்சிறந்த படமாக பார்க்கப்பட்டது. ஆனாலும், புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதன் பிறகு பாலிவுட் சினிமாக்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

ஆனால், அங்கும் அவரது நடிப்பு திறமையை பார்க்காமல் அவரது கவர்ச்சியை குறித்தே செய்திகள் வெளியானது அதை பயன்படுத்திக்கொண்ட ராய் லட்சுமி பிகினி உடையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து கிளாமராக போஸ் கொடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது விஸ்கி பிராண்டிற்கு விளம்பரம் கொடுத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.