வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (09:15 IST)

சூர்யா & ஆர் ஜே பாலாஜி இணையும் படத்துக்கு ஆங்கிலத் தலைப்பு!

’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, மற்றும் ‘என் ஜி கே’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

மிகக் குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கங்குவா ரிலீஸான பின்னர் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் காஷ்மீரா பரதேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சிவப்பு மஞ்சள் பச்சை, அன்பறிவ் மற்றும் பிடி சார் ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்துக்கு “Hint” என்ற தலைப்பு தற்போது வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பேன் இந்தியா கலாச்சாரத்துக்காக தற்போது ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது தற்போது வாடிக்கை ஆகிவருகிறது.