வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 4 டிசம்பர் 2024 (07:53 IST)

புஷ்பா இரண்டாம் பாகத்தோடு முடியாது… கடைசி நேரத்தில் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

புஷ்பா முதல் பாகத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் வணிக மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் 3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் புஷ்பா மூன்றாம் பாகமும் உருவாகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்தின் முடிவில் மூன்றாம் பாகத்துக்கான முன்னோட்டம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.