சம்மர் வெக்கேஷன் போட்டோஷூட்டை வெளியிட்ட பிரியங்கா மோகன்!
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் பிரியங்கா மோகன். அந்த படத்தின் வெற்றிக்கு அவரின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.
சமீபத்தில் இவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல பாராட்டுகளைப் பெற்றது. தற்போது கவினுடன் ஒரு படம், தெலுங்கில் நானியோடு சரிபோதா சனிக்கிழமை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கவினுடன் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.