நான் மட்டுமல்ல.. என் தாயும் அப்படித்தான் - பிரியங்கா சோப்ரா பதிலடி
இந்திய பிரதமர் மோடியின் முன்பு, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொடை தெரியும் படி அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி, சமீபத்தில் ஜெர்மனுக்கு சென்ற போது, அங்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் சிறிது நேரம் உரையாடினார். இந்த புகைப்படத்தை பிரியங்கா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அதில் அவர் மோடியின் முன்பு காலின் மேல் காலிட்டு அமர்ந்துள்ளார். இதை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதில் சிலர், ஒரு பிரதமரின் முன்பு இப்படி மரியாதை இல்லாமல், அநாகரிகமாக ஆடை அணிந்து தொடை தெரியும் படி அமர்ந்திருக்கிறீர்களே, இது சரியா என வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில், தானும் தனது தாயும் தொடை தெரியும் படியான ஆடை அணிந்து அமர்ந்திருந்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு “இதில் ரத்தத்திலேயே உள்ளது” என குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.