பிரியா பவானிக்கு கல்யாணமா? லேட்டஸ்ட் பதிவால் ரசிகர்கள் கவலை!
நடிகை பிரியா பவானி விரைவில் தனது காதலனை திருமணம் செய்ய உள்ளார்.
செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். அதையடுத்து சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேயாத மான் படத்தில் அறிமுகமான இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா: சாப்டர் 1 , ஓமணப் பெண்ணே, உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்திருக்கும் அவர் ராஜவேல் என்பவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் புதிய வீடு ஒன்றை காட்டினார். இந்நிலையில் காதலர் தினத்தில் சிகப்பு நிற ஆடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு Red, Ofcourse! என கூறியுள்ளார்.
காதலர் கலர் code படி பார்த்தல், சிகப்பு : ஏற்கனவே காதலில் இருப்பதாக அர்த்தம். அதை அவர் வெளிப்படையாகவே கூறியிருப்பதால் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறாரோ? என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.