1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (17:39 IST)

ஹாரிஸ் கல்யாணுடன் நடித்தது மிகவும் இனிமையாக இருந்தது - டிகன்கனா சூர்யவன்ஷி

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் ட்ரைலர் யூடியூபில் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் டிகன்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான், ரேணுகா, முனீஷ்காந்த், டேனியல் ஆன் போப், பாண்டியராஜன் மற்றும் மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை டிகன்கனா சூர்யவன்ஷி பேசியுள்ளார். "'தனுசு ராசி நேயர்களே' டிரைலர் வெளியான பிறகு தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து என் மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். விலை மதிக்க முடியாத இந்தப் பரிசு எனக்கு மிகுந்த வலிமையைத் தருகிறது. இதற்காக நான் தயாரிப்பாளர் கோபாலன் சார் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக தமிழில் அவர்கள் தயாரித்த முதல் படத்திலேயே என்னையும் பங்கு பெறச் செய்தது, எனக்கு உண்மையில் மிகப் பெரிய விஷயம்.
 
இப்படம் தனக்கு முதல் படமாக இருந்தாலும் இயக்குநர் சஞ்சய் பாரதி, பரந்த மனதுடன் என்னைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். தனது பணி குறி்தது மகத்தான தெளிவுடன் அவர் பணியாற்றிய விதம், முதிர்ந்த காட்சிகளாக படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
 
ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றியது ஒரு சுவையான அனுபவம். அற்புதமான குணங்களைக் கொண்ட அவர் ஓர்அருமையான சக நடிகர். மிக அமைதியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது பணியில் மட்டுமே மிகவும் கவனம் செலுத்துபவர். படப்பிடிப்புக்கிடையே எனக்கும் அவருக்கும் எந்தவொரு சிறு பிணக்கும் ஏற்படவில்லை. படப்பிடிப்பு மொத்தமும் மிக இனிமையாகக் கழிந்தது. ரெபா மோனிகா ஜானுடன் எனக்கு படத்தில் மிகச் சில காட்சிகள் மட்டுமே உண்டு. இனிமையான பெண்மணியான இவருடன் படப்பிடப்பின் இடையே கிடைக்கும் நேரத்தில் அரட்டை அடிப்பதுண்டு. மொத்தத்தல் இப்படத்தில் நடத்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.